Thursday, October 22, 2009

சாகிப்கிரான் கவிதைகள்

நினைத்ததைத் தரும் கற்பக விருட்சத்திற்கு அடியில் ஒரு நவீனன்

பசியாற்றி
ஆசுவாசப் படுத்திய
பெண்கள்
சென்ற பின்
புலி வருவதற்கு
முன்

நடுவிலொரு

கோடாரியை வர
வழைத்த
ந்த மரத்தை
வெட்டி யெறிந்தானி
வன்.

அடையாளம் தேடிய
லைந்த புலி
திகைத்தது.

காடு
கல்லாகிக் காத்திருக்கக்
தொடங்கும் கணத்திற்கு
முந்தைய ஒரு
பூவின் யுகம்
தப்பி வண்ணத்துப்பூச்சியாக
இன்னும் பறந்து
கொண்டுதா னிருக்கிறது.மறைந்திருக்கும் பூதம்

முதலில் நீ
மது வருந்துகிறாய்
பிறகு
மது வுன்னை யருந்துகிறது
இப்போது நீ
யென்னை யருந்த
திகி லுடனு ன்னைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

கட்டமைக்கப்பட்டிருக்கும்
பதுங்கு குழிகளுள் உறங்கும்
சாத்தான்கள் உனை
நானறியும் சாத்தியத்தின்
அசலோ வியத்தைச் சுக்கல்களாக்கி
ஒன்று கூட்டும் விளையாட்டி லென்னை
தோற்கடிக்க

மறுநாளும் மறுநாளு
மென்னைத் தேடியலைகின்றன

மது வருந்த.கொல்லனின் மகள்

பழுத்து விரியும்
அந்த சிவ ப்பிரும்பை
பார்க்க
தினமும் களத்திற்குச்
சென்றுவிடுவேன்.

ஆயுதக் குவியல்களுக் கிடையே
சாம்பல் பூவாக
எனக்கொரு
சிரிப்பை வைத்திருப்பாள்.

ஒருநாள்
பெரிய கூட்டத்தினிடையே
அழுதுகொண்டிருந்தாள்
தலைவெட்டிய சிதைவுடலாக
கிடக்கும் கொல்லனின் மகள்.

பிரிதொருநாள்
அயல் தேசத்து
ஆயுதக்கிடங்கெங்கும்
ஆயுதங்களுக்கு மாற்றாக
பூக்கள்
நிரம்பிக் கிடக்க
சர்வதேச சபைகள்
அம்மனுக்குப் பூ
மிதித்துச் சென்றன.

வாத்துகளை நம்பிய
முயலை மாமிச தின்னிகள்
தின்பதைப்போலவே
வாத்துகள் சிறு
புழுக்களைத் தின்கின்றன

திசைகள்
எல்லாவற்றிற்கும்
எதிராகவே
விரைந்து கொண்டிருக்கின்றன.

திசைகளற்று
சில பூக்களுடன்
பறவை யொன்றும்
பிறகு
ஆயுதக்கிடங்குகள்.முன்னிலை ஒருமை

எப்போதும் போலவே

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
விருட்சம் தன்னை
நெகிழ்த்துக் கொண்டு
செம்பச்சை இலை யொன்றை
பளபளக்கச் செய்கிறது.

அந்த இலையே
விருட்சமாக
அந்த இலையே
கிளையாக
அந்த இலையே
காம்பாக
அந்த இலையே
பச்சையமாக
அந்த இலையே
ஒளியாக
அந்த இலையே
காற்றாக
காட்சிப்படுகிறது.

சிமிட்டி மலர்ந்த கணம்
இலை பழுத்து விடுகிறது.
விருட்சத்தை
கிளையை
பச்சையத்தை
பிரிந்தும் விடுகிறது.

இப்போது மரம்
வலுவானதாக மாறுகிறது.
ஒளி கண்களைக் கூச
காற்று மரத்தைப் பெயர்த்து
என் கபாலம் நசுக்க
விரைகின்றது.

நசுக்கினால் நசுங்கி
அறுத்தால் அறுபட்டு
போகவே
எல்லாம் உண்டாக்கப்பட்டிருக்க
நசுங்கும்போது ஒரு
ஓவியத்தையும்
அறுபடும்போது ஒரு
சிலையையும் விட்டுச் செல்வது,

எப்போதும் போலவே
இப்போதும் நடக்கிறது.

பவளக்கொடி இதழ் ஐந்தில் வெளிவந்தவை
(அக்டோபர் – 2009 இதழ்)

3 comments:

 1. It is a joy to see your blog.Just like visiting your writing Book.
  Your essays are fine. just one day beore only I read the complete collection of Karikaalan.He has become a full pledged poet in every sense. Even after crossing seven seas and seven hills, something seems to be left by Karikaalan.What is it? I enjoyed the Article on my littile friend Jeevan Benny's poems.
  Vaazhthukkaludan,
  Samayavel.

  ReplyDelete
 2. It is a joy to see your blog.Just like visiting your writing Book.
  Your essays are fine. just one day beore Kadavu meetinng, I read the complete collection of Karikaalan.He has become a full pledged poet in every sense. Even after crossing seven seas and seven hills, something seems to be left by Karikaalan.What is it? I enjoyed the Article on my littile friend Jeevan Benny's poems.
  Vaazhthukkaludan,
  Samayavel.

  ReplyDelete
 3. அன்பினிய சாஹிப் அல்லது கிரண் வணக்கம்.

  நான் காமராஜ். நண்பர் பெரியசாமி உங்கள் பக்கத்தை அறிமுகம் செய்தார்.
  இப்போதுதான் வந்தேன் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது.
  கொல்லனின் மகள் இந்த உலகிற்குப்பூக்கள் கொண்டுவரட்டும்.
  இது அறிமுகத்துக்காக மட்டும்.திரும்ப வருகிறேன்.

  ReplyDelete